பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement

சேலம்: சேலம், அரசு மகளிர் கலைக்கல்லூரியில், மாணவியர் பொங்கல் வைத்து கொண்டாடினர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை, சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறை மாணவியர் நேற்று கல்லூரி வளாகத்தில் கொண்டாடினர். கரும்பு தோரணம் அமைத்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து, பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு, சூரியனுக்கு நன்றி தெரிவித்தனர். இதில், மாணவியர் சேலை அணிந்தும், ஒரு சிலர் ஆண்களை போல், வேட்டி சட்டை அணிந்தும் கலந்து கொண்டனர். கும்மியடித்தல் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளுடன், பொங்கல் பண்டிகையை மாணவியர் உற்சாகமாக கொண்டாடினர்.* ஓமலூர் ஆர்.சி.,செட்டிப்பட்டியில், அரசு உதவி பெறும், புனித நிக்கோலஸ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 197 மாணவ, மாணவியர், 13 ஆசிரியர்கள் உள்ளனர். நேற்று காலை, காமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிகவுண்டர் தலைமையில் பொங்கல் விழா நடந்தது. அதில், தமிழர்களின் பாரம்பரியமான கயிறு இழுத்தல், உறி அடித்தல், ஐந்தாங்கல், நொண்டி அடித்தல், கபடி, 7 கல் வைத்து அடித்தல், பம்பரம், கோலப்போட்டி, கிராமிய நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி வளாகத்தில், ஆசிரியர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தாளாளர் எட்வர்டு ராஜன், தலைமை ஆசிரியர் லியோ ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X