பொது செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்த பணி தொகை ரூ.15 கோடி நிலுவை: அனல்மின் ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement

மேட்டூர்: கடந்த எட்டு மாதங்களாக, முடிவுற்ற ஒப்பந்த பணிகளுக்கான தொகை, 15 கோடி ரூபாயை வழங்காமல், நிலுவை வைத்துள்ளதை கண்டித்து, அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேட்டூரில், 840 மெகாவாட் பழைய, 600 மெகாவாட் புதிய அனல்மின் நிலையங்கள் உள்ளன. இதில், ஒப்பந்த அடிப்படையில், 100க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பல்வேறு பணிகளை செய்கின்றனர். அதற்கான தொகையை, வாரியம் பணி முடிந்து இரு மாதங்களில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கி விடும். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்பு நடந்த ஒப்பந்த பணிகளுக்கு, இன்னமும் தொகை வழங்கவில்லை. இதை கண்டித்து, நேற்று காலை மேட்டூர் பழைய அனல்மின் நிலையம் முன், ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் மாதுராஜ், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் தனசேகரன் உள்பட, 60க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கறுப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் நிர்வாகிகள் கூறியதாவது: மேட்டூரிலுள்ள, இரு அனல்மின் நிலையங்களிலும் கடந்த, எட்டு மாதங்களாக செய்த ஒப்பந்த பணிகளுக்கு இன்னமும் பணம் வழங்கவில்லை. மொத்தம், 15 கோடி ரூபாய் அனல்மின் நிலைய நிர்வாகம் நிலுவை வைத்துள்ளது. ஆனால், ஒப்பந்த பணிகளுக்கான ஜி.எஸ்.சி., தொழிலாளர்களுக்கான, இ.பி.எப்., தொகை மட்டும் உடனுக்குடன் நாங்கள் செலுத்த வேண்டியுள்ளது. எங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க சிரமப்படுகிறோம். பல ஒப்பந்ததாரர்கள், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். நிலுவை தொகையை, ஒப்பந்ததாரர்களுக்கு உடனடியாக வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X