10 ஆண்டுக்கு முன் மாயமான ஆசிரியை; உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

10 ஆண்டுக்கு முன் மாயமான ஆசிரியை; உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு

Added : ஜன 14, 2020

ஆத்தூர்: பத்து ஆண்டுகளுக்கு முன், 20 வயது வாலிபருடன் மாயமான, 26 வயது தனியார் பள்ளி ஆசிரியை, கணவர், இரண்டு குழந்தைகளுடன் ஊர் திரும்பினார். தன் பெற்றோரால் உயிருக்கு ஆபத்து உள்ளதால், பாதுகாப்பு கேட்டு போலீசில் புகாரளித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் வடக்கு தில்லை நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் செல்வமணி, 36; பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டின் அருகில் உள்ள, ராமநாதன் மகன் ரமேஷ், 30, என்பவருடன் செல்வமணிக்கு பழக்கம் ஏற்பட்டு, இரண்டு முறை வெளியூர் சென்றவர்களை உறவினர்கள் மீட்டு வந்தனர். ஆறு வயது குறைவான மற்றும் தம்பி உறவு முறை கொண்ட ரமேஷூடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதை, இரு வீட்டு பெற்றோரும் கண்டித்துள்ளனர். மூன்றாவது முறையாக, கடந்த, 2010 ஜூன், 21ல், ரமேஷ், செல்வமணியும் மாயமாகினர். இதுகுறித்து செல்வமணி தாய் பெரியம்மாள், ஆத்தூர் போலீசில் புகாரளித்தார். அதன்படி, செல்வமணியை கடத்தி சென்ற ரமேஷ், அவரது சகோதரர் சுரேஷ், தந்தை ராமநாதன், சித்தப்பா சகாதேவன், உறவினர்கள் சீனிவாசன், கி?ஷார்குமார், பிச்சமணி ஆகிய, ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். செல்வமணியை, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பெரியம்மாள், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். ஆத்தூர் போலீசார், கோவை, ஈரோடு, ஊட்டி, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தேடியும், இருவரும் மீட்கப்படவில்லை. இந்த வழக்கின் மீது பெரியம்மாள், 2017ல், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார். அப்போதைய, சேலம் எஸ்.பி., ராஜன், ஆத்தூர் டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் ஜூலை மாதத்திற்குள் ஆசிரியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின், செல்வமணி, கணவர் ரமேஷ், ஏழு வயது மகன் குகன் கார்த்திக், ஒன்றரை வயது மகன் யுகன் கார்த்திக் ஆகியோருடன், நேற்று நரசிங்கபுரம், தில்லைநகர் வந்தார். அதையறிந்த செல்வமணியின் தாய் உள்ளிட்ட குடும்பத்தினர், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பின், செல்வமணி, ஆத்தூர் டவுன் போலீசில், என் விருப்பத்தின்பேரில், ரமேஷூடன் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தேன். யாரும் என்னை கடத்திச் செல்லவில்லை. பொங்கல் விழாவுக்காக, சொந்த ஊருக்கு வந்த என்னை, தனது தாய் உள்ளிட்டோர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். நான், கணவர் மற்றும் குழந்தைகள், கணவரது குடும்பத்தினரின் உயிருக்கு பாதிப்பு உள்ளதால், பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என, புகார் மனு அளித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X