பொது செய்தி

தமிழ்நாடு

பனமரத்துப்பட்டி அ.தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் நீக்கம்

Added : ஜன 14, 2020
Advertisement

பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றிய, அ.தி.மு.க., துணை செயலாளர் பொன்னுசாமி. இவர், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் பதவி வகித்தவர். இம்முறை, அவரது மகள் ஜீவிதா, அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பனமரத்துப்பட்டியில் மொத்தம், 13 ஒன்றிய கவுன்சிலர் பதவி உள்ளது. அதில், அ.தி.மு.க., 6, தி.மு.க., 5, பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றனர். பா.ம.க.,வுடன் சேர்த்து, அ.தி.மு.க., கூட்டணியில் ஏழு கவுன்சிலர்கள் இருந்தனர். அதனால், ஒன்றியக்குழு தலைவர் பதவி, அ.தி.மு.க.,வுக்கு உறுதியானது. ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற, அ.தி.மு.க., ஒன்றிய செயலர், கவுன்சிலருமான ஜெகநாதன், ஒன்றிய துணை செயலாளர் பொன்னுசாமிக்கும் இடையில் போட்டி ஏற்பட்டது. பொன்னுசாமி மகள் ஜீவிதா, ஒன்றியக்குழு தலைவர் பதவிக்காக, தி.மு.க., கவுன்சிலர்களுடன் கைகோர்த்தார். அதனால், அ.தி.மு.க., அணியின் பலம் ஆறு, தி.மு.க., அணியின் பலம் ஏழு என, மாறியது. கடந்த, 11 ல், ஒன்றிய அலுவலகத்தில் நடந்த தேர்தலில், ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் மனு அளித்தார். அவருக்கு போட்டியாக, அ.தி.மு.க., கவுன்சிலர் ஜீவிதா மனு அளித்தார். மறைமுக ஓட்டுப்பதிவு தேர்தலில், ஜெகநாதன் ஏழு ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். ஜீவிதா ஆறு ஓட்டு பெற்று தோல்வியடைந்தார். ஒரு தி.மு.க., கவுன்சிலரின் ஓட்டு, அ.தி.மு.க.,வுக்கு சென்றுள்ளது.

இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக, ஜீவிதாவின் தந்தை பொன்னுசாமி, நேற்று, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டார். ஒன்றியக்குழு துணை தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., அணியில், பா.ம.க., கவுன்சிலர் ராஜேஸ்வரி போட்டியிட்டார். அ.தி.மு.க., 5, பா.ம.க., ஒன்று என, ஆறு கவுன்சிலர்கள் இருந்தனர். ஆனால், மறைமுக தேர்தலில், ராஜேஸ்வரி ஐந்து ஓட்டு பெற்று, தோல்வியடைந்தார். ஒரு அ.தி.மு.க., கவுன்சிலரின் ஓட்டு, தி.மு.க.,வுக்கு சென்றுள்ளது. ஒன்றிய செயலாளரை எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க., பெண் கவுன்சிலரின் தந்தை, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதேநேரத்தில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட்ட, அ.தி.மு.க., கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என, பா.ம.க.,வினர் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X