தமிழ்நாடு

சேலத்தில் ரூ.945.44 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்

Added : ஜன 14, 2020
Advertisement

சேலம்: ''சேலம் மாநகராட்சியில், ரூ.945.44 கோடி மதிப்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,'' என, கமிஷனர் சதீஷ் கூறினார்.
சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில், கோட்டை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.5.85 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் பல்நோக்கு சமுதாய கூட கட்டுமான பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சதீஷ் நேற்று ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், இரண்டாம் கட்டமாக சேலம் தேர்வு செய்யப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, ரூ.945.44 கோடி மதிப்பில், பகுதி அடிப்படையில் அபிவிருத்தி, நகர் முழுமைக்கான திட்டம் என இரண்டு பிரிவில், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், எல்.இ.டி., விளக்குகள் பொருத்துதல், நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையம் அமைத்தல், மாநகராட்சி கட்டடங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துதல் உள்ளிட்ட ஒன்பது பணிகள், ரூ.45.70 கோடி மதிப்பீட்டில், முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.92.13 கோடியில் இரண்டடுக்கு பஸ் ஸ்டாண்ட், ரூ.20.04 கோடி மதிப்பில், எருமாபாளையம் திடக்கழிவை பசுமை தளமாக மாற்றும் பணி, ரூ.18.08 கோடியில் திருமணி முத்தாற்றின் கரைகளை மேம்படுத்தும் பணி, 21.35 கோடியில், இரண்டு இடங்களில், அடுக்குமாடி வாகன நிறுத்தம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில், கோட்டை பகுதியில் அமையவுள்ள பல்நோக்கு கூடத்தில், 400 பேர் அமரக்கூடிய வகையில், முற்றிலும் குளிரூட்டப்பட்ட விழா அரங்கம், 200 பேர் ஒரே சமயத்தில் உணவருந்தும் வகையில் உணவுக்கூடம், நவீன சமையலறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பார்க்கிங் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். மாநகர பொறியாளர் அசோகன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X