சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் பெண் மருத்துவர் பலி: லாரி டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

Added : ஜன 14, 2020
Advertisement

சேலம்: லாரி மோதி, பெண் மருத்துவர் பலியான வழக்கில், டிரைவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராசிபுரம், மாரப்பன்தோட்டத்தை சேர்ந்தவர் பொம்மன், 60, இவரது மகள் கீர்த்தனா, 24, எம்.பி.பி.எஸ்., முடித்து, தர்மபுரியில் பணிபுரிந்து வந்துள்ளார். தர்மபுரி செல்வதற்காக, தனது தந்தையுடன், 2017, செப்., 15ல், டூவீலரில் சேலம் நோக்கி வந்துள்ளார். பொய்மான்கரடு பகுதிக்கு வரும் போது, கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், கீர்த்தனா உயிரிழந்தார். அவரது தந்தை பொம்மன் காயமடைந்தார். இதுகுறித்து மல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் மாவட்டத்தை சேர்ந்த பரத்சிங்பால், 33, கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு சேலம் ஜே.எம்.எண்-6ல் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், பரத்சிங்பாலுக்கு இரண்டு ஆண்டு சிறை, 3,500 ரூபாய் அபராதம் விதித்து, மாஜிஸ்திரேட் சந்தோஷ் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X