சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் இளம் பெண் மர்ம சாவு: கணவரிடம் போலீசார் விசாரணை

Added : ஜன 14, 2020
Advertisement

சேலம்: சேலம், சூரமங்கலத்தில் இளம் பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து, அவரின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், பழைய சூரமங்கலத்தை சேர்ந்த இளங்கோவன், 27, கயிறு மண்டியில் வேலை செய்கிறார். இவர் கடந்த, 2018ல் அதே பகுதியை சேர்ந்த தீபிகா, 22, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, தீபிகா தனது பெற்றோர் வீட்டில் கடந்த, 11 மாதங்களுக்கு மேலாக இருந்து வந்தார். இந்நிலையில் ஜன.,11ல், தீபிகாவை சமாதானம் செய்து, இளங்கோவன் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீபிகாவின் தாய், மகேஸ்வரி, 40, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக, சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இது குறித்து, இளங்கோவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X