சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.300 கோடி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.1.11 கோடி மோசடி செய்த 4 பேர் கைது

Added : ஜன 14, 2020
Share
Advertisement

சேலம்: கிறிஸ்தவ மிஷனரியிடமிருந்து, 300 கோடி ரூபாய் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி, விவசாயியிடம், 1.11 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே அத்தாம் பாளையம், புள்ளாகவுண்டனூரை சேர்ந்த பழனிவேல், 49, நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் புகார் மனு அளித்தார். அதில், சங்ககிரி, திருச்செங்கோட்டை சேர்ந்த சிலர், கிறிஸ்தவ மிஷனரியின் மூலம், 300 கோடி ரூபாய் பெற்று தருவதாக கூறிய ஆசை வார்த்தையை நம்பி என் விவசாய நிலத்தை, 1.16 கோடி ரூபாய்க்கு விற்று, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் வைத்து, முதல் தவணையாக, 50 லட்சம், கொண்டலாம்பட்டியில் வைத்து, 40 லட்சம், சூரமங்கலம் பகுதியில் வைத்து, 21 லட்சம் என மொத்தம், 1.11 கோடி ரூபாய் வழங்கினேன். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த கும்பல், வெளிநாட்டு பணத்தை தரவில்லை. அது மட்டுமின்றி, நான் கொடுத்த பணத்தையும் தர மறுக்கின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்து இருந்தார். இதையடுத்து, மேற்கு சரக குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பூபதி ராஜன், அழகாபுரம் இன்ஸ்பெக்டர் கந்தவேல் தலைமையில், தனிப்படை அமைத்து கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், மோசடியில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் சிவக்குமார், 29, சங்ககிரியை சேர்ந்த முரளி மகன் அஸ்வின், 20, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த காதர்பாட்ஷா மகன் மிசாத், 30, கச்சிராப்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி மகன் மாதேஸ், 22, ஆகியோரை நேற்று காலை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்செங்கோட்டை சேர்ந்த மெகா மோசடி மன்னன் லோகநாதன், 30, கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதும், அவரது கூட்டாளிகளான சரவணன், 25, கி ?ஷார், 24, ஆகியோர் பெங்களூருவில் முகாமிட்டபடி, இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். லோகநாதன், தான் வெளிநாட்டில் உள்ள கிறிஸ்தவ மிஷனின், தமிழக ஒருங்கிணைப்பாளராக உள்ளதாகவும், 300 கோடி ரூபாய் பரிசு பெற்று தருவதாக கூறி மோசடியை அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது. லோகநாதன் உட்பட, மூவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X