பொது செய்தி

தமிழ்நாடு

நிதியுதவி பள்ளியில் ஐந்திணை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement

கோபி: கோபி அருகே, அரசு நிதியுதவி பள்ளியில், ஐந்திணை பொங்கல் வைத்து, ஆசிரியர்கள் பொங்கல் விழா கொண்டாடினர்.
கோபி அருகே கோபிபாளையத்தில், தூய திரேசாள் முதனிலை நிதியுதவி பள்ளி இயங்கி வருகிறது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 180 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். தலைமை ஆசிரியர் அரசு தாமஸ் தலைமையில், எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளி குழந்தைகள், அவர்களின் பெற்றோர்களுடன் இணைந்து, ஆசிரியர்கள் நேற்று பொங்கல் விழா கொண்டாடினர். பள்ளி வளாகத்தில், வகுப்புக்கு ஒரு பொங்கல் என்ற முறையில், ஐந்து பொங்கல் வைத்தனர். ஒன்றாம் வகுப்புக்கு குறிஞ்சி பொங்கல், இரண்டாம் வகுப்புக்கு முல்லை, மூன்றாம் வகுப்புக்கு மருதம், நான்காம் வகுப்புக்கு நெய்தல், ஐந்தாம் வகுப்புக்கு பாலை பொங்கல் என ஐந்திணை பொங்கல் வைத்தனர். இயற்கைக்கு படையலிட்டு, குழந்தைகளுக்கு கொடுத்தனர். தலைமை ஆசிரியர் அரசு தாமஸ் கூறுகையில், ''இயற்கையின் ஐம்பெரும் ஆற்றல்களுக்கு, நன்றி பாராட்டும் விதமாக ஐந்திணை பொங்கல் வைத்தோம். பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் உறுதுணையாக செயல்பட்டனர்,'' என்றார்.

அந்தியூரில்...: அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவியர் நேற்று சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். எம்.எல்.ஏ., ராஜா கலந்து கொண்டார். பொங்கல் வைத்த மாணவியர், பாரம்பரிய முறையில் கும்மியடிக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ.,வும் இதில் கலந்து கொண்டு கும்மியடித்தார். உறியடிக்கும் நிகழ்வும் நடந்தது. இதில் மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதேபோல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் கே.எஸ்.சி., பள்ளியிலும், பொங்கல் விழா நடந்தது.

அரச்சலூரில்...: அரச்சலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை சாமியாத்தாள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனுடையோர் சார்பில்...: ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச்சங்கம் பவானி ஒன்றிய கிளை சார்பில், பவானி பச்சியம்மன் கோவிலில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. மூத்த உறுப்பினர் அங்குலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மாவட்ட தலைவர் துரைராஜ், மகளிர் பிரிவு தலைவி கவிதா, ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட, 40 பேர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X