பொது செய்தி

தமிழ்நாடு

மீன்வள உதவியாளர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

ஈரோடு: ஈரோடு கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மீன்வள உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில், காலியாக உள்ள ஆறு மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. தமிழில் எழுத படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். நீந்துதல், மீன்பிடித்தல், வலை பின்னுதல், பரிசல் ஓட்டுதல் மற்றும் பழுதடைந்த வலைகளை சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும். மீன்வளத்துறை பயிற்சி நிலைய சான்றிதழ் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பங்களை, ஈரோடு மீன்வள உதவி இயக்குனர் அலுவலகத்தில், நேரிலோ அல்லது adferode@gmail.com மின்னஞ்சலில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், 42 சுப்புராம் காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், கலெக்டர் அலுவலகம் அருகில், ஈரோடு-638011 என்ற முகவரிக்கு, பிப்.,4ம் தேதி, மாலை, 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X