அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : ஜன 14, 2020

சாக்கடையால் நோய் அபாயம்: ஈரோடு யூனியன், குருப்பநாயக்கன் பாளையம் பஞ்., நடராஜ் நகர் பகுதியில் வீடுகளின் கழிவுநீர் தேங்கியுள்ளது. பல மாதமாக தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடையை முறையாக தூர்வாரா ததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். உள்ளாட்சி தேர்தல் முடிந்து, பஞ்., தலைவரும் பதவியேற்றுள்ள நிலையில், ஓட்டளித்த மக்கள், உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கின்றனர். துர்நாற்றத்துக்கு தீர்வு கிட்டுமா?
சாலையோரத்தில் பள்ளத்தால் தவிப்பு: மொடக்குறிச்சி யூனியன், துய்யம் பூந்துறை பஞ்சாயத்திலிருந்து பெரலிமேடு, பெருமாபாளையம் செல்லும் வழியில், பல இடங்களில் சாலையின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டு, வாய்க்கால் பாதை போல் உள்ளது. எதிரெதிரே வாகனங்கள் செல்லும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் இறங்கும்போது, விபத்தில் சிக்குகின்றனர். பாதசாரிகளும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இருபக்கமும் மண்ணை கொட்டி, சாலை உயரத்துக்கு சமன்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

சாலையில் பாயுது பாதாள சாக்கடை: ஈரோடு மாநகராட்சி, வீரபத்திர வீதியில் பாதாள சாக்கடை நிரம்பி, மேல்மூடி வழியே கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையிலும், ஓரத்திலும் கழிவுநீர் தேங்குவதால், துர்நாற்றம் வீசுகிறது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி குடியிருப்புகள் அதிகம் உள்ளன. டூவீலரில் செல்வோர், நடந்து செல்வோர் மீது கழிவுநீர் படுகிறது. பொது சுகாதாரம் கேள்விக்குறியான நிலையில், மாநகராட்சி மெத்தனம் காட்டுவதாக, அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X