பொது செய்தி

தமிழ்நாடு

கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள்

Added : ஜன 14, 2020
Advertisement

ஈரோடு: ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களிடம், ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது, மோசமாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை கோரி, கறுப்பு பேட்ஜ் அணிந்து, நேற்று பணி செய்தனர். உணவு இடைவேலையின்போது, அனைத்து யூனியன் அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தலை குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் ஊரக வளர்ச்சி துறையினர் பணி செய்தனர். தேர்தலின் ஓட்டு எண்ணிக்கையின்போது, கடலூர், விழுப்புரம், விருதுநகர் உட்பட பல இடங்களில், கட்சியினர் உட்பட பலரும் மோசமாக நடந்து கொண்டனர். தாக்குதல், மிரட்டும் வகையில் பல சம்பவங்கள் நடந்தன. ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது. அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில், 14 யூனியன்களிலும், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்ததுடன், உணவு இடைவேளையின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, அனைத்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் தெரிவித்தனர். சென்னிமலை யூனியன் அலுவலகத்தில், பி.டி.ஓ.,கோவிந்தராஜ் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X