பொது செய்தி

தமிழ்நாடு

'பிளைன்' இலவச சீருடை தயாரிப்பு 'ஆர்டர்': விசைத்தறியாளர்கள் சார்பில் மனு

Added : ஜன 14, 2020
Advertisement

ஈரோடு: அரசின் இலவச சீருடை தயாரிப்பை, தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி, விசைத்தறியாளர்கள், மனு வழங்கினர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம், கங்காபுரம், லக்காபுரம், சித்தோடு, பி.பி.அக்ரஹாரம் போன்ற பகுதிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலை தயாரிப்பு முடிந்த நிலையில், இலவச சீருடை தயாரிப்பதற்கான ஆர்டர் வர உள்ளது. இலவச சீருடைகளில், பிளைனாக துணியை உற்பத்தி செய்வதற்கான ஆர்டர் வேண்டும் எனக்கூறி, ஈரோடு, சித்தோடு, லக்காபுரம் பகுதி விசைத்தறி உற்பத்தியாளர்கள், ஈரோடு மாவட்ட கைத்தறி மற்றும் துணி நூல் பதனிடும் துறை உதவி இயக்குனர் ஆனந்தகுமரிடம், மனு வழங்கினர்.

இதுகுறித்து விசைத்தறியாளர்கள் கூறியதாவது: இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடை தயாரிப்பை, விசைத்தறி நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம், அரசு வழங்குவது, விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. தற்போது பள்ளி சீருடை துணிகள் கட்டம் போட்ட சட்டை, டிசைன் துணிகளை உருவாக்கும் வகையில் மாற்றியுள்ளனர். இவற்றை, சாதாரண விசைத்தறியில் தயாரிக்க இயலாது. இத்தொழிலில் இப்பகுதியில், 25 ஆயிரத்து, 478 விசைத்தறிகள் ஈடுபட்டுள்ளன. ஜெ., முதல்வராக இருந்தபோது, இலவச சீருடைகள் பிளைனாக தயாரித்துக் கொடுக்க ஆர்டர் வழங்கப்பட்டது. டிசைனாக தயாரிக்க ஆர்டர் தந்தால், விசைத்தறியை மாற்றி அமைத்து, மேம்படுத்த மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும். அப்போதுதான் அதுபோன்ற ரகங்களை உற்பத்தி செய்ய முடியும். அல்லது, பிளைன் துணியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மனுவை பெற்றுக் கொண்ட உதவி இயக்குனர் ஆனந்தகுமார், ''அரசுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கிறேன்,'' என்று உறுதியளித்தார். இதை தொடர்ந்து, விசைத்தறியாளர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X