பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை கண்ணன் மீது பி.எஸ்.பி.,யினர் புகார்

Added : ஜன 14, 2020
Advertisement

ஈரோடு: மாயாவதியை தவறாக பேசிய, நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை கோரி, ஈரோடு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர், ஈரோடு டி.ஆர்.ஓ., கவிதாவிடம் மனு வழங்கினர். மனு விபரம்: நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், எஸ்.டி.பி.ஐ., சார்பில் நடந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து தவறாக பேசியதாக, நெல்லை கண்ணன் மீது வழக்குப் பதிவானது. அதே கூட்டத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதியை, தவறாக பேசியுள்ளார். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலச்சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X