சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலை மோசடி புகாரில் 4 பேர் கைது: விசிட்டிங் கார்டு அடித்து ஏமாற்றியது அம்பலம்

Added : ஜன 14, 2020
Advertisement

ஈரோடு: சேலை வாங்கி மோசடி செய்த வழக்கில், நான்கு பேரை போலீசார் கைது செய்து, 600க்கும் மேற்பட்ட சேலைகளை பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை, துடுப்பதி, பட்டகாரன்பாளையம், ஆயிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி, 40; நூல் சேலை தயாரித்து விற்கிறார். ஈரோடு, கிருஷ்ணா டெக்ஸ் உரிமையாளர் பிரகாஷ் எனக்கூறி, 618 நூல் சேலைகளை, வேலுசாமியிடம் வாங்கினார். அவற்றின் மதிப்பு, 4.29 லட்சம் ரூபாயாகும். சேலையை கடைக்கு கொண்டு சென்று தந்தபோது, அவரை நூதனமாக ஏமாற்றி, சேலைகளுடன் தப்பிச் சென்றார். இதுகுறித்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் சேலை வாங்கி ஏமாற்றிய, ஈரோடு, கருங்கல்பாளையம், கே.என்.கே. ரோட்டை சேர்ந்த புருஷோத்தமன், 31; நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த சேகர், 45; அதே பகுதியை சேர்ந்த ஓவிராஜ், 42; சேலத்தை சேர்ந்த பழனிச்சாமி, 51, ஆகியோரை வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று பிடித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கிருஷ்ணா டெக்ஸ் பெயரில், போலியாக விசிட்டிங் கார்டு அச்சிட்டுள்ளனர். கடையை, 15 நாட்களுக்கு முன் வாடகைக்கு பிடித்து, 5,000 ரூபாய் மட்டுமே அட்வான்சாக கொடுத்துள்ளனர். புருஷோத்தமன், தன்னை பிரகாஷ் என்று போலியான பெயரில் அறிமுகப்படுத்தி கொண்டார். வேலுசாமியை அவசரப்படுத்தி, நூல் சேலையை பெற்றுக் கொண்டு, சேலம் மாவட்டம் தாரமங்கலத்துக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது. சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X