சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி சடலமாக தொங்கியது குறித்து விசாரணை

Added : ஜன 14, 2020
Advertisement

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி, மரத்தில் சடலமாக தொங்கியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த நந்தத்தை சேர்ந்தவர், சந்தோஷ், 25; வீடுகளுக்கு தகர கூரை அமைக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை, அவரது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை, மறைவிடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அச்சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த உறவினர்கள் சந்தோசை தேடினர். இந்நிலையில், அன்றிரவு, 8:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள மாந்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் சந்தோஷ் தூக்கில் சடலமாக தொங்கினார். கந்திலி போலீசார், அவரது உடலை கைப்பற்றிய போது, உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்தன. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆத்திரத்தில், சந்தோசை மக்கள் அடித்துக்கொலை செய்து, மரத்தில் தொங்க விட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த, 10 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். படுகாயமடைந்த சிறுமி, மேல்சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X