சம்பவம் செய்தி

தமிழ்நாடு

100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

Added : ஜன 14, 2020
Advertisement

பேர்ணாம்பட்டு: பேர்ணாம்பட்டு அருகே, 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பலியானார். ஆந்திரா மாநிலம் பலமனேரிலிருந்து, வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வழியாக சென்னைக்கு, மைதா மாவு மூட்டை ஏற்றிய கன்டெய்னர் லாரி, நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு புறப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டையை சேர்ந்த டிரைவர் பஷீர் அகமத், 44, லாரியை ஓட்டினார். இரவு, 10:00 மணிக்கு, பேர்ணாம்பட்டு அருகே, பத்தலபல்லி மலை கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, சாலை தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு, 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே டிரைவர் பஷீர் அகமத் பலியானார். விபத்து குறித்து, நேற்று காலை, 10:00 மணிக்குத்தான் மக்களுக்கு தெரிந்தது. பேர்ணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X