சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது வாங்குவதில் தகராறு: ஆட்டோ டிரைவர் அடித்து கொலை

Added : ஜன 14, 2020
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார். திருவண்ணாமலை அடுத்த, ஏந்தல் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர், 30; எடப்பாளையத்தை சேர்ந்த, பழ வியாபாரி ஆனந்தன், 32; நண்பர்களான இவர்கள், அடிக்கடி ஒன்றாக மது அருந்துவது வழக்கம். இதேபோன்று நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, ஏந்தல் பைபாஸ் சாலை அருகே, மது அருந்த சென்றனர். அங்கு, மது வாங்குவதில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆனந்தன், சங்கரின் தலையில் கல்லால் தாக்கினார். இதில் மயங்கி விழுந்த சங்கரை மீட்ட, அவரது அண்ணன் சம்பத், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், ?வரும் வழியிலேயே சங்கர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆனந்தனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X