பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : ஜன 14, 2020
Advertisement

சுகாதார வளாக கட்டடம் வீண்: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபாலபுரம் பஞ்.,ல், 12 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த, 2011 - 12ல், புதுப்பிக்கப்பட்டது. சுகாதார வளாகத்தை முறையாக, பராமரிக்க பஞ்., நிர்வாகம் ஆர்வம் காட்டாததால், தற்போது, பயன்பாடின்றி உள்ளது. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலையுள்ளது. எனவே, சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
ரேஷன் கடை திறக்கப்படுமா? செல்லியம்பட்டி பஞ்., கடுக்காப்பட்டி சமத்துவபுரத்தில் கடந்த, 2010 - 11ல், புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளதால், சமத்துவபுர மக்கள் மட்டுமின்றி, இக்கடைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், ரேஷன் பொருட்கள் வாங்க நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம், கடுக்காப்பட்டியில் உள்ள ரேஷன் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.

சங்க கட்டடமின்றி மகளிர் குழுவினர்: நல்லம்பள்ளி பஞ்., கோவிலூரில் கடந்த, 2003 - 2004ல் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் கட்டப்பட்டது. கடந்த, பல ஆண்டுகளாக காட்சி பொருளாக உள்ள, இக்கட்டடத்துக்கு, 2015 -2016ல், ஊரக வளர்ச்சித்துறையினர் சாய்வு தளம் அமைத்தனர். தொடர்ந்தும், இக்கட்டடத்தை, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இப்பகுதி மகளிர் சுய உதவிக்குழுவினர், மழைக்காலங்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X