பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலையொட்டி பானை விற்பனை ஜோர்

Added : ஜன 14, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு பெய்த பருவமழையால், நெல் சாகுபடி மட்டுமின்றி, அனைத்து விவசாய பயிர்களும் நன்கு வளர்ந்து விவசாயிகளுக்கு லாபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தாண்டு பொங்கல் பண்டிகையை விவசாயிகள் சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர். இதையொட்டி, பொங்கல் பானைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதே போன்று பள்ளி, கல்லூரிகளில் நேற்று பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் கொத்து வாங்கி, பொங்கல் வைத்து, பொங்கல் விழாவை கொண்டாடினர். கல்லூரிகளில் நடந்த பொங்கல் விழாக்களில் மாணவ, மாணவியர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, பாவாடை, தாவணி, சேலை யணிந்து கலந்து கொண்டனர்.* அரூரில், நேற்று நடந்த வாரச்சந்தையில், பொங்கல் வைக்க தேவையான மண்பானைகள், மாடுகளுக்கு கட்டப்படும் பல்வேறு வகையான கயிறுகள், வண்ண கோலப்பொடிகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை விவசாயிகளும், பொதுமக்களும் அதிகளவில் வாங்கிச் சென்றனர். மாடுகளுக்கு கட்டப்படும் கழுத்து கயிறு, கொம்பு கயிறு, சங்கு கயிறு உள்ளிட்ட பல வகையான கயிறுகள் விற்பனையாகின.


*தர்மபுரி மாவட்ட, தி.மு.க., சார்பில், அதன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தர்மபுரி எம்.எல்.ஏ., தடங்கம் சுப்ரமணி தலைமை வகித்தார். இருதய ஆண்டவர் பேராலய பங்குத்தந்தை இசையாஸ், அரபிக்கல்லூரி பேராசிரியர் சபீர்அகமது ஆகியோர் முன்னிலையில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. இதில் பங்கேற்ற கட்சியினருக்கு, சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஏழை எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.


* வேலூர் அருகே, விருதம்பட்டில் உள்ள அரசு காப்பகத்தில் பொங்கல் விழா நேற்று நடந்தது. வேலூர் துணை கலெக்டர் கணேஷ் துவக்கி வைத்தார். ரெட்கிராஸ் சங்க செயலாளர் ஜனார்த்தனன் உட்பட பலர் பங்கேற்றனர்.


* திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கஸ்பா அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று பொங்கல் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் குமருபாரதி துவக்கி வைத்தார். வேலூர் சாயிநாதபுரம் டி.கே.எம்., மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது. கல்லூரி செயலாளர் மணிநாதன் தலைமை வகித்தார். கலெக்டர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X