பொது செய்தி

தமிழ்நாடு

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு

Added : ஜன 14, 2020
Advertisement

தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு, பால், தயிர், சந்தனம், குங்குமம், இளநீர், நெய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், மூலவர் விநாயகருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இக்கோவில் உற்சவ விநாயகர் ஊர்வலம் நடந்தது. இது, எஸ்.வி.,ரோடு, கடைவீதி, மகாத்மாகாந்தி சாலை, வெளிபேட்டை தெரு, சுண்ணாம்புக்கார வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில், தேர்நிலையம் செல்வகணபதி விநாயகர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக அலங்காரங்கள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X