இரண்டு ஆண்டுகளாக எரியாத விளக்குகள்

Added : ஜன 14, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி அடுத்த அண்ணா நகரில், இரண்டு ஆண்டுகளாக எரியாமல் உள்ள உயர்மின் கோபுர விளக்கால், இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரி அடுத்த, நாயக்கன்கொட்டாய் பஞ்.,க்கு உட்பட்ட அண்ணா நகரில், 70 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன், பஞ்., நிர்வாகம் சார்பில், உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்த கம்பத்தில் இருந்த விளக்குகள் பழுதானது. இதனால் இது எரியாமல், காட்சி பொருளாக உள்ளது. இரவில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீட்டிற்க்குள் நுழைகின்றன. இதுகுறித்து, பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதி மக்களின் நலன்கருதி, பழுதான மின்விளக்குகளை அகற்றிவிட்டு, புதிய விளக்குகள் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X