பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 2,020 பானைகளில் பொங்கல்

Added : ஜன 14, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: அரசு மகளிர் கலைக்கல்லூரியில், 2,020 பானைகள் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியுடன், ஜே.சி.ஐ., கிருஷ்ணகிரி மாங்கனி நகர் இணைந்து கலாசார ஒற்றுமை பொங்கல் விழாவை நடத்தின. இதில், 2,020 பானைகளை வரிசையாக வைத்து, மாணவியர் தனித்தனியாக பொங்கல் வைத்தனர். கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் கீதா முன்னிலை வகித்தார். கணிதத்துறை தலைவர் உமா வரவேற்றார். கலெக்டர் பிரபாகர், எஸ்.பி., பண்டிகங்காதர் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், ஒரே இடத்தில், 2,020 பானைகளை வைத்து பொங்கல் வைக்கப்பட்டதால், யுனிவர்சல் அச்சுவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், பியூச்சர் கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், அன் அபிசியல் வேர்ல்டு ரெக்கார்ட் அட்டம்ட் ஆகிய புத்தகங்களில் இந்த சாதனை இடம் பெற்றன. தொடர்ந்து, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆங்கிலத்துறை தலைவர் கல்பனா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X