பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி

Added : ஜன 14, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி, மினி மாரத்தான் போட்டி நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மல்லிநாயனப்பள்ளி பஞ்., மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தினர், தங்களது குழந்தைகளை அரசு பள்ளி களில் சேர்க்க வலியுறுத்தி, எலுமிச்சங்கிரி கிராமத்தில், யாவரும் கேளிர் தன்னார்வ குழு சார்பில், மினி மாரத்தான் போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் ப்ளோரா இருதயராணி தலைமை வகித்தார். திரைப்பட இயக்குனர் ஐயப்பன் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார். இதில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கு, 3 கி.மீ., ஓட்டமும், 14 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 6 கி.மீ., ஓட்டம் என இரு பிரிவுகளாக போட்டி நடந்தது. திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த, 220க்கும் மேற்பட்டோர் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில், யாவரும் கேளிர் தன்னார்வக்குழுத்தலைவர் பூபதி, செயலாளர் ராஜசேகர், பொருளாளர் வடிவேல், ஓய்வுபெற்ற தமிழாசிரியர் நரசிம்மன் உள்ளிட்டோர் போட்டியை ஒருங்கிணைத்தனர். முதலிடம் பெற்றவருக்கு, 5,001 ரூபாயும், இரண்டாம் இடம் பெற்றவருக்கு, 2,001 ரூபாயும், மூன்றாம் இடம் பெற்றவருக்கு, 1,001 ரூபாயும், ஆறுதல் பரிசு, 15 பேருக்கும் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X