பொது செய்தி

தமிழ்நாடு

மீன்வள உதவியாளர் காலிப்பணியிடம்: தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளத்துறையில் காலியாக உள்ள ஒன்பது மீன் வள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன் வளத்துறையில் ஒன்பது மீன் வள உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக விண்ணப்பிப்போர் தமிழில் எழுத படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். நீந்துதல், மீன்பிடித்தல், வலை பின்னுதல், பரிசல் ஓட்டுதல் மற்றும் அறுந்த வலைகளை சரிசெய்ய தெரிந்திருக்க வேண்டும். மீன் வளத்துறையின் மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்று பெற்றிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக விண்ணப்பிப்போர், 2020 ஜன.,,1ம் தேதியன்று எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், 35 வயதுக்குள்ளும், எம்.பி.சி., மற்றும் பி.சி., பிரிவினர், 32 வயதுக்குள்ளும் ஓ.சி., பிரிவினர், 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வயது நிரூபண சான்றிதழ், சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் கூடிய விண்ணப்பத்தை மீன் துறை உதவி இயக்குனர், எண், 24, நான்காவது கிராஸ் கோ - ஆப்பரேட்டிவ் காலனி, கிருஷ்ணகிரி, 1, என்ற முகவரிக்கு வரும், 27 பிற்பகல், 4:00 மணிக்குள் கிடைக்குமாறு, விண்ணப்ப உறையின் மேல், மீன் வள உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பம் என எழுதி, அனுப்ப வேண்டும். இது குறித்து மேலும் விபரங்கள் அறிய, 04343 - 235745 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X