பொது செய்தி

தமிழ்நாடு

2018ல் வேலையிழந்த தொழிலாளர்கள் நிறுவனம் முன் திரண்டு போராட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement

ஓசூர்: சூளகிரி அருகே, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் வேலையிழந்த தொழிலாளர்கள், தனியார் கார்மென்ட்ஸ் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த திருமலை கவனிகோட்டா கிராமம் அருகே, 'ஸ்ரீ டெக்ஸ் டைல்ஸ்' என்ற தனியார் கார்மென்ட்ஸ் இயங்கி வந்தது. இதில், சூளகிரி சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தனர். இரண்டு மாதமாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத நிலையில், கடந்த, 2018 செப்.,ல் திடீரென அந்நிறுவனம் மூடப்பட்டது. உரிமையாளர் தரப்பை, தொழிலாளர்கள் தொடர்பு கொண்ட போது, நிறுவனம் நஷ்டமடைந்து விட்டதாகவும், நிறுவனத்தை விற்பனை செய்து தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பி.எப்., தொகையை கூட உரிய முறையில் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம், கடந்த, 15 நாட்களாக வேலைக்கு ஆட்களை எடுத்து வருகிறது. இதையறிந்த வேலையிழந்த தொழிலாளர்கள், 300க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, அந்த நிறுவனத்தின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய நிறுவனம் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில், ஏற்கனவே பணியிலிருந்த தொழிலாளர்களை பணிக்கு எடுத்து கொள்வதாக தகவல் வெளியானது. தொழிலாளர்கள் தரப்பில், ஊதிய பாக்கி மற்றும் பி.எப்., பிடித்தம் ஆகியவற்றை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், சமாதானமடைந்த தொழிலாளர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X