பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., பணிக்கு எழுத்துத்தேர்வு

Added : ஜன 14, 2020
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் கல்லூரியில், எஸ்.ஐ., பதவிக்கான எழுத்துத்தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. இதில், ஆண்கள், 1,739 பேர், பெண்கள், 290 பேர் என மொத்தம், 2,029 பேர் தேர்வு எழுதினர். 862 பேர் தேர்விற்கு வரவில்லை. இரண்டாம் நாளான நேற்று, போலீஸ் பணியில் இருந்து கொண்டு, எஸ்.ஐ., தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த, 200 பேர் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் மொத்தம், 188 போலீசார் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். நான்கு பெண்கள் உட்பட மொத்தம், 12 போலீசார் தேர்வு எழுத வரவில்லை. கடலோர பாதுகாப்பு குழு டி.ஐ.ஜி., பவானீஸ்வரி மற்றும் மாவட்ட எஸ்.பி., பண்டிகங்காதர் ஆகியோர், தேர்வு மையத்தை பார்வையிட்டனர்.* தர்மபுரி காந்தி நகர் ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த, எஸ்.ஐ., பதவியிடத்துக்கான எழுத்து தேர்வில், 312 பேர் மட்டும் கலந்து கொண்டனர். 33 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. தேர்வு மையத்தில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எஸ்.பி., ராஜன் தேர்வு மையத்தில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X