சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் திருடிய 2 பேர் கைது

Added : ஜன 14, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் பைக் திருடிய திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து எட்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி அடுத்த ஒரப்பத்தில் கடந்த, 8ல் நடந்த வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க வந்திருந்த கனகமுட்லுவை சேர்ந்த கட்டட மேஸ்திரி ராஜேந்திரன், 45, என்பவரது பைக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அவரது புகாரின்படி கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கந்திகுப்பத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே போலீசார் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பர்கூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சந்தேகத்துக்கு இடமாக வந்த பைக்கை போலீசார் நிறுத்த முயன்ற போது, பைக்கில் வந்த இருவர் நிறுத்தாமல் சென்றனர். சந்தேகமடைந்த போலீசார், அவர்களை விரட்டிப் பிடித்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்த பெரியண்ணன், 42, குமார், 40 ஆகியோர் என்பதும், அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து எட்டு திருட்டு பைக்குகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X