பொது செய்தி

தமிழ்நாடு

20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Added : ஜன 14, 2020
Advertisement

சேந்தமங்கலம்: வாரச்சந்தையில், 20 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மீண்டும் பயன்படுத்துவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து, சேந்தமங்கலம் பேரூராட்சியில், செயல் அலுவலர் காலசாமி தலைமையில், துப்புரவு ஆய்வாளர்கள் பாலு, சிவக்குமார் அடங்கிய குழுவினர், பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தையில், ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் செயல்படும் மளிகை, பொரிக்கடை, கலர் பொடி கடை மற்றும் பழக்கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, 20 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக் உள்ளிடட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X