திருப்பாவை ஒப்புவித்தல்: அரசுப் பள்ளி அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பாவை ஒப்புவித்தல்: அரசுப் பள்ளி அசத்தல்

Added : ஜன 14, 2020

ராசிபுரம்: ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், நாமக்கல் மாவட்ட அளவில் பாவை விழாவையொட்டி திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டிகள் நடந்தன. 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நான்குக்கும் மேற்பட்ட பரிசுகளை பெற்றனர். மாணவர் பார்த்தசாரதி முதல் பரிசு பெற்றார். இவருக்கு சான்றிதழுடன், 3,000 ரூபாய் வழங்கப்பட்டது. மாணவர் இளையாழ்வார் இரண்டாமிடம் பிடித்தார். தலைமை ஆசிரியர் குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X