பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கலெக்டரிடம் மனு

Added : ஜன 14, 2020
Advertisement

நாமக்கல்: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கேட்டு, பொட்டிரெட்டிப்பட்டி, கரியபெருமாள் புதூரை சேர்ந்தவர்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சேந்தமங்கலம் தாலுகா, பொட்டிரெட்டிப்பட்டியில், தமிழர்களின பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், இந்தாண்டும், வரும், பிப்., 1ல், ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், கரியபெருமாள்புதூரை சேர்ந்த ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சேந்தமங்கலம் தாலுகா, போடிநாயக்கன்பட்டி அடுத்த களியபெருமாள்புதூரில் வசித்து வருகிறோம். நாமக்கல் மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கும் அரசாணையில் உள்ள ஊர்களின் பட்டியலில், சேந்தமங்கலம் தாலுகாவில், எங்கள் ஊர் கலியபெருமாள்புதூர் இடம் பெற்றுள்ளது. பிப்., 29ல், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X