பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement

நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில துணைத் தலைவர் ஜெயக்கொடி தலைமை வகித்தார். ஊதியம் மற்றும் பொங்கல் போனஸ், முன்பணம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். மையங்களில் உணவு சமைப்பதற்கு தேவைப்படும் காய்கறி மற்றும் காஸ் ஆகியவற்றுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள, 15 ஒன்றியங்களில், நாமக்கல்லை தவிர்த்து மற்ற ஒன்றியங்களில் டிச., மாத ஊதியம் வழங்கப்பட்டு விட்டது. நாமக்கல் ஒன்றியத்தில் மட்டும் ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக ஊதியம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயலாளர் பிரேமா, துணைத் தலைவர் பாண்டியம்மாள், அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X