பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளிகளில் செய்முறை தேர்வு: அரசு ஆசிரியர்களை ஈடுபடுத்த கோரிக்கை

Added : ஜன 14, 2020
Advertisement

நாமக்கல்: 'தனியார் பள்ளிகளில் நடக்கும் செய்முறை தேர்வு பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாநில தலைவர் ராமு மற்றும் நிர்வாகிகள், அரசு தேர்வுகள் இணை இயக்குனர் உஷாராணியிடம் கொடுத்த கோரிக்கை மனு விபரம்: எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுப் பணிகளுக்கு குலுக்கல் முறையை ரத்து செய்து, மென்பொருள் கொண்டு தேர்வுப்பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். குலுக்கல் முறை தான் தொடரும் எனில், துறை அலுவலர், முதன்மை கண்காணிப்பாளர் நியமனத்திற்கும் குலுக்கல் நடத்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு பணிகளில், தனியார் பள்ளி செய்முறைத்தேர்வு பணிகளுக்கு, அரசுப் பள்ளி ஆசிரியர்களும், அரசுப்பள்ளி செய்முறை தேர்வுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டதே கடந்த காலத்தில் நடந்தது. ஆனால், கடந்த, இரு ஆண்டுகளாக மட்டும் தனியார் பள்ளிகளில் நடக்கும் செய்முறை தேர்வுப் பணிகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களும், அரசுப் பள்ளிகளில் நடக்கும் செய்முறை தேர்வுப் பணிகளுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். அதே வேளையில், செய்முறை தேர்வு நிறைவு பெற்றதும், எழுத்து தேர்வு பணிகள் ஒதுக்கீட்டின் போது தனியார் பள்ளிகளுக்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தேர்வுப் பணியை செய்கின்றனர். எனவே, நடப்பாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் நடக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு பணிகளில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை முழுமையாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X