பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம்: 42,490 பேர் படிவங்கள் சமர்ப்பிப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஆறு சட்டசபை தொகுதிகளிலும், கடந்த மார்ச், 26 முதல், டிச., 16 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் நடந்தன. இதில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்கள் தொடர்பாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று விசாரணை செய்தனர். அதன்பின், வரைவு வாக்காளர் பட்டியலானது டிச., 23ல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஜனவரி, 22 வரை, சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடக்கின்றன. ஜன., 1ம் தேதியன்று, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 2001 டிச., 31 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியும். கடந்த 4, 5 தேதிகளிலும், 11, 12 தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். வரும், 22 வரை அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் படிவங்களை சமர்ப்பிக்கலாம். நான்கு சிறப்பு முகாம்கள் மற்றும் இதர நாள்களில், ராசிபுரம் தொகுதி, 6,863, சேந்தமங்கலம், 7,297, நாமக்கல், 8,571, ப.வேலூர், 7,018, திருச்செங்கோடு, 6,576, குமாரபாளையம், 6,165 படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், படிவங்கள் 6 (சேர்த்தல்): 28,729, 7(நீக்கல்): 5,567, 8(திருத்தம்): 4,281 மற்றும் 8ஏ(இடமாற்றம்): 3,913 என, மொத்தம், 42,490 பேர் வழங்கியுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.,மாதம் வெளியிடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X