சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொந்த இடத்தில் வேறொருவர் ஆக்கிரமிப்பு: கலெக்டர் ஆபீசில் குடும்பத்துடன் தர்ணா

Added : ஜன 14, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'தனக்கு சொந்தமான இடத்தில், வேறொரு சமூகத்தை சேர்ந்தவர் அத்துமீறி நுழைந்து குடிசை போட்டுள்ளார். அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கிராமத்து பெண் தன் குடும்பத்துடன், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ப.வேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அடுத்த நல்லாக்கவுண்டம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் மனைவி கிருஷ்ணவேணி, 36. அவர், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது, கலெக்டர் அலுவலக போர்டிகோவில், கிருஷ்ணவேணி, அவரது தாயார், குழந்தைகள், திடீரென தரையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கதறி அழுதனர். போலீசார் அவர்களை வெளியேற்ற முயற்சித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், அவர்களை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடன் சேர்த்து, பிலிக்கல்பாளையத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 103 பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதில், நான் வீடு கட்டி குடியிருந்து வருகிறேன். இந்நிலையில், என் வீட்டுக்கு முன், வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண், அத்துமீறி நுழைந்து, குடிசை போட்டுள்ளார். அவருக்கு, சொந்தமாக வீடு இருப்பதுடன், அவரது மகன்கள் வசதியாக உள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவற்றை அகற்ற வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X