பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : ஜன 14, 2020
Advertisement

குழாய்கள் சீரமைக்கப்படுமா? கரூர் அருகே அருகம்பாளையத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பொதுமக்கள் வசதிக்காக அப்பகுதியில், போர்வெல்கள் போடப்பட்டது. தற்போது, போர்வெல் குழாய்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், போர்வெல் குழாய்களை உடனடியாக சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

- பி. மணிகண்டன், அருகம்பாளையம்.

கால்வாயை தூர்வார வேண்டும்: கரூர் அருகே, அரசு காலனியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கழிவுநீர் வாய்க்கால், பல மாதங்களாக தூர்வாரப் படவில்லை. இதனால், கழிவுநீர் தேங்கிய நிலையில் உள்ளது. துர்நாற்றமும், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தொற்று நோய் ஏற்படும் முன், கால்வாயை தூர்வார நடவடிக்கை தேவை.

- து.பாபு, அரசு காலனி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X