கவுன்சிலர்கள் அறிமுகக்கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலர்கள் அறிமுகக்கூட்டம்

Added : ஜன 14, 2020

குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியன் அலுவலகத்தில், கவுன்சிலர் களின் அறிமுகம் கூட்டம் நடந்தது. யூனியன் குழு தலைவர் லதா தலைமை வகித்து, பேசுகையில், ''தோகைமலை யூனியனில் பொது மக்கள் தேவைகளுக்கு ஏற்ப வளர்ச்சி பணிகளை விரைவு படுத்தி, தமிழக அரசுக்கு நற்பெயர் ஈட்டித் தரவேண்டும். பொது மக்களின் அடிப்படை கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்,'' என்றார். கமிஷனர் ராஜேந்திரன், அலுவலர்களை அறிமுகம் செய்து வைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பாராட்டினார். இதில், முன்னாள் குழு தலைவர் சந்திரசேகரன், கீழவெளியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கடன் தலைவர் ரங்கசாமி மற்றும் யூனியன் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X