பொது செய்தி

தமிழ்நாடு

நாளை முதல் பொங்கல் விழா: மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

Added : ஜன 14, 2020
Share
Advertisement

கரூர்: பொங்கல் திருவிழாவையொட்டி, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டில் நேற்று, பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல், போகி பண்டிகையுடன் இன்று துவங்குகிறது. நாளை நடக்கவுள்ள சூரிய பொங்கல், நாளை மறுநாள் நடக்கவுள்ள மாட்டு பொங்கல், 17 ல் நடக்கவுள்ள காணும் பொங்கல் திருவிழாக்களுக்கு பொதுமக்கள் காய்கள், பழங்கள், மஞ்சள்கொத்து, கரும்பு, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்கெட்டில் வாங்கி சென்றனர். தேங்காய் ஒன்று, ஐந்து முதல், 15 ரூபாய், 25 ரூபாய் வரையிலும், மஞ்சள் கொத்து ஒரு ஜோடி, 25 முதல், 30 ரூபாய் வரையிலும், வாழைப் பழம் ரகத்தை பொறுத்து ஒரு சீப், 30 முதல், 60 ரூபாய், தக்காளி கிலோ, 16 ரூபாய், வெண்டைக்காய், 26 ரூபாய், புடலை, 18 ரூபாய், கேரட், 56 ரூபாய், பீர்க்கங்காய், 30 ரூபாய், கத்தரிக்காய், 40 ரூபாய், அவரைக்காய், 55 ரூபாய், செங்கரும்பு, ஒரு ஜோடி, 60 ரூபாய், முருங்கைக்காய், 120 ரூபாய், பச்சை மிளகாய், 36 ரூபாய்க்கு விற்றது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் கரூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷனில் அவர்களின் ஊருக்கு செல்ல குவிந்தனர். ஜவஹர் பஜாரில், வீட்டு வாசலில் கோலமிட பயன்படும், கலர் பொடிகளை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஒரு பாக்கெட், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. போகி பண்டிகையையொட்டி, வீட்டு வாசலில் வைக்கப்படும், ஆவாரம் பூ, தும்பை பூ, வேப்பிலை ஆகியவை உள்ள, ஒரு காப்புக்கட்டு, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X