பொது செய்தி

தமிழ்நாடு

பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு பவுடர்: நோய் தடுப்புக்கு பயன்படுத்துவதாக புகார்

Added : ஜன 14, 2020
Advertisement

குளித்தலை: குளித்தலையில், நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக, சுண்ணாம்பு பவுடர் தெளிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மழைக்காலங்களில் நோய் தொற்று பரவாமல் இருக்கவும், குடிநீரில் உள்ள கிருமிகளை அழிக்கவும், சுகாதாரத்துறை சார்பில் பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், குளித்தலையில் கடந்த சில மாதங்களாக அரசு விழாவானாலும், சுகாதார வளாகங்களை தூய்மைப்படுத்துவது என்றாலும், சுண்ணாம்பு பவுடரை நகராட்சி பணியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று காலை, 9வது வார்டில், தற்காலிக பணியாளர்கள் பவுடர் தெளித்து வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, கடந்த சில மாதங்களாகவே பிளீச்சிங் பவுடர் பற்றாக்குறையால், சுண்ணாம்பு பவுடரில் சிறிதளவு பிளீச்சிங் பவுடரை கலந்து நகர் முழுவதும் பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர். சுண்ணாம்பு பவுடர் தெளிப்பதால் தொற்று நோய், கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முடியாது; குடிநீரில் பிளீச்சிங் பவுடருக்கு பதில் எதை கலப்பார்கள் என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து, நகராட்சி ஆணையர் புகழேந்தி கூறியதாவது: குடிநீர் மற்றும் பொது சுகாதார வளாகம், பொது கழிவுநீர் வடிகாலில் நோய் தடுப்பு நடவடிக்கையில் பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தப்படுகிறது. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் வருகையின் போது, அழகுபடுத்துவதற்காக, அதனுடன் சுண்ணாம்பு பவுடர் சேர்த்து சாலையோரத்தில் தெளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X