பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு விழா: தணிக்கை குழுவினர் ஆய்வு

Added : ஜன 14, 2020
Advertisement

குளித்தலை: ஆர்.டி.மலையில், வரும், 17ல் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவையொட்டி, ஆய்வு கூட்டம் நடந்தது. குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலையில், வரும், 17ல், 58வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. இதுவரை, 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இதுகுறித்த ஆடிட் கமிட்டி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. முன்னாள் சப் - கலெக்டர் தர்மராஜ் தலைமை வகித்தார். ஜல்லிக்கட்டு விழா விதிமுறை, கணக்கு தணிக்கை, ஜல்லிக்கட்டு காளைகள் துன்புறுத்தப்படாமல் பங்கேற்க செய்தல், கால்நடை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற செய்தல், காளைகளை துன்புறுத்தாமல் பிடித்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக, ஜல்லிக்கட்டு காளைகளுக்கான வாடிவாசல் உட்பட, ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடந்தது. தணிக்கை குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X