பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஜன 14, 2020
Advertisement

கழிப்பிடத்தை பராமரிக்கணும்! கரூர் அருகே வாங்கல் பஸ் ஸ்டாப்பில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கழிப்பிடம் கட்டப்பட்டது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பல மாதங்களுக்கு முன் கழிப்பிடம் பழுதானது. இதை பஞ்சாயத்து அதிகாரிகள், கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், வாங்கல் பஸ் ஸ்டாப்புக்கு செல்லும், பொதுமக்கள் திறந்தவெளிப்பகுதியை கழிப்பிடமாக, பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
சிமென்ட் தூண்கள் சரி செய்யப்படுமா? கரூர் அருகே சணப்பிரட்டியில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதிலிருந்து, சணப்பிரட்டி பழைய பஞ்., பகுதிகளுக்கு, தற்போது குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், மேல்நிலை குடிநீர் தொட்டியின் சிமென்ட் தூண்கள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள, தூண்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

நிழற்கூடத்தில் உடைந்த இருக்கை: கரூர் சர்ச் கார்னர் பஸ் ஸ்டாப்பில், பயணிகள் வசதிக்காக, மூன்று ஆண்டு களுக்கு முன் நிழற்கூடம் கட்டப்பட்டது. அப்போது, பயணிகள் அமர இருக்கைகள் போடப்பட்டன. தற்போது, அவை உடைந்த நிலையில் உள்ளன. இதனால், பயணிகள் உட்கார முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், முதியவர்களால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. எனவே, பயணிகள் நிழற்கூடத்தில் உடனடியாக புதிய இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவுநீர் தேக்கம்; சுகாதார சீர்கேடு: கரூர் அருகே தொழிற்பேட்டை பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சின்டெக்ஸ் தொட்டி சேதம் அடைந்துள்ளது. மேலும், கழிவுநீர் செல்ல வழியில்லாமல், தேங்கியுள்ளது. இதனால், பொது மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, 'போர்வெல் குழாயை சீரமைத்து, கழிவுநீர் செல்ல வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

சாக்கடை வாய்க்கால் தூர்வாரப்படுமா? கரூர், கோட்டையண்ணன் தெரு வழியாக சாக்கடை வாய்க்கால் செல்கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் சாக்கடை வாய்க்காலில், செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மேலும், பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழைநீர், சாலையில் செல்லும் நிலை உள்ளது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X