பொது செய்தி

தமிழ்நாடு

1.20 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து: ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்

Added : ஜன 14, 2020
Advertisement

கரூர்: ''மொத்தம், 1.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
போலியோ சொட்டு மருந்து முகாம், வரும், 19ல் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் அன்பழகன் பேசியதாவது: பிறந்த குழந்தை முதல், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும், 19ல் நடக்கிறது. அதில், 1.20லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 836 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என, 3,300 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், சிக்னல்கள், ரயில்வே ஸ்டேஷன், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சுங்கச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, அவ்வழியே பயணம் செய்யும் பயணிகளிடம், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு சொட்டு மருந்து வழங்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே, குறிப்பாக கிராமப்புற மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் செல்வகுமார், நகராட்சி நகர் நல அலுவலர் ஸ்ரீபிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X