தமிழ்நாடு

செயலாளர்களை இடம் மாற்றணும்: பஞ்., தலைவர்கள் எதிர்பார்ப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

கரூர்: 'கிராம பஞ்., செயலாளர்களையும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்ய வேண்டும்' என, பஞ்., தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில், 27 மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், புதிய தலைவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். பஞ்சாயத்துகளின் நிர்வாகத்தை, 2016 அக்டோபர் முதல் கடந்த, 6 வரை, பஞ்., செயலாளர்கள் தான் கவனித்து வந்தனர். மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட பஞ்., பஞ்சாயத்து யூனியன் மற்றும் டவுன் பஞ்சாயத்து செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றனர். ஆனால், கிராம பஞ்சாயத்தில், செயலாளர் பல ஆண்டுகளாக பொறுப்பில் இருப்பது வழக்கம். பஞ்சாயத்து தலைவர்களுக்கு இணையாக, செயலாளர்களின் பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலம், புதிதாக பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வருகிறவர்களுக்கு, உள்ளாட்சி துறை சட்டத்திட்டங்கள் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை பயன்படுத்திக் கொண்டு, செயலாளர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, செயலாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என, புதிய பஞ்., தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்துகளில் நடக்கும் தவறுகள் வெளியே ஓரளவுக்கு தெரிகிறது. ஆனால், மத்திய, மாநில அரசுகளின் நிதி அதிகளவில் குவியும், கிராம பஞ்சாயத்துகளில் நடக்கும் முறைகேடுகள் வெளியே தெரிவது இல்லை. புதிய குடிநீர் இணைப்புக்கு பணம் பெற்றுக்கொண்டு, பல செயலாளர்கள் ரசீது வழங்குவதில்லை. மேலும், சொத்து வரி வசூல் செய்வதில், செயலாளர்கள் அவர்களது இஷ்டம் போல் செயல்படுகின்றனர். இதனால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. அடுக்குமாடி கட்டடங்களுக்கு முறைகேடாக பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், முன்னாள் தலைவர்கள் பலர் சிக்கலில் உள்ளனர். இதனால், அரசுத் துறைகளில் இடமாற்றம் செய்வது போல, பஞ்சாயத்து செயலாளர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X