பொது செய்தி

தமிழ்நாடு

திருவிழா நடத்தக்கோரி பொதுமக்கள் மனு

Added : ஜன 14, 2020
Advertisement

கரூர்: 'கருப்பசாமி கோவிலில் பழ பூஜை திருவிழா நடத்த வேண்டும்' என, வேப்பங்குடி பொதுமக்கள், கலெக்டர் அன்பழகனிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடவூர் அருகில் வேப்பங்குடியில் ஹிந்துசமய அறநிலையத்துறை சார்பில் கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் தை பொங்கலில் பழ பூஜை திருவிழா நடத்துவது வழக்கம். இந்த கோவில் பூசாரி நியமனம் செய்வதில் பிரச்னை உள்ளது. இந்த ஆண்டு தை பொங்கலில் பழ பூஜை நடப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. விழா நடந்தால் தான் ஊர் செழிக்கும் என்பது, இந்த பகுதி மக்களில் நம்பிக்கை. எனவே, உரிய பேச்சுவார்த்தை நடத்தி விழா நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X