சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரவில் மணல் கடத்தல்: இரண்டு லாரிகள் பறிமுதல்

Added : ஜன 14, 2020
Advertisement

கரூர்: இரவு நேரத்தில், மணல் கடத்திய இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றில் மணல் அள்ள ஏராளமான குவாரிகள் செயல்பட்டு வந்தன. ஆனால், நீதிமன்ற உத்தரவு காரணமாக மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் இரவு, அதிகாலை நேரங்களில் மாட்டு வண்டிகளின் மூலம் மணல் அள்ளப்படுகிறது. பின், அவை ஓரிடத்தில் குவிக்கப்பட்டு, லாரிகள் வாயிலாக பிற மாவட்டங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, மண்மங்கலம் அருகில் கோவிந்தம்பாளையம், கரூர் அருகில் பவித்திரம் ஆகிய பகுதிகளில், ஆர்.டி.ஓ.. சந்தியா தலைமையில் சோதனை நடந்தது. அப்பகுதியில் ஆற்றுமணல் கடத்திய இரு லாரிகளை நிறுத்தினர். டிரைவர்கள், லாரியை நிறுத்திவிட்டு ஓடிவிட்டனர். இதையடுத்து இரு லாரிகளையும் பறிமுதல் செய்து, லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, வாங்கல் மற்றும் க.பரமத்தி போலீசாருக்கு, ஆர்.டி.ஓ., அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X