பொது செய்தி

தமிழ்நாடு

சீசனிலும் விலையில்லாததால் அவரை விவசாயிகள் கவலை

Added : ஜன 14, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பொங்கல் சீசன் துவங்கியும் விலையில்லாத மொச்சை அவரையால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம் முழுவதும், மொச்சை அவரை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பொங்கல் சீசன் என்பதால், இதன் விலை அதிகரிக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். கடந்தாண்டு வரத்து குறைவால், மொச்சை அவரை கிலோ, 80 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், இந்தாண்டு தர்மபுரி மாவட்டம் முழுவதும், சராசரி மழையை விட கூடுதலாக பெய்தது. ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. இதனால், விவசாயிகள் மொச்சை அவரை, நெல், சோளம் உள்ளிட்டவற்றை அதிகளவில் சாகுபடி செய்தனர். விளைச்சல் அதிகரித்ததால், தற்போது சந்தைக்கு மொச்சை அவரை வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், பொங்கல் சீசன் துவங்கியும், தர்மபுரி உழவர் சந்தையில் இதன் விலை கிலோ, 30 ரூபாயாக உள்ளது. இந்த விலை சரிவுக்கு காரணம், மொச்சை அவரை விளைச்சல் மற்றும் சந்தைக்கு வரத்து அதிகமாக இருப்பதே. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X