சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூர்வீக சொத்து தராததால் குடும்பத்துடன் முதியவர் தீக்குளிக்க முயற்சி

Added : ஜன 14, 2020
Advertisement

தர்மபுரி: பூர்வீக சொத்தை, பிரித்து தராத சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏரியூரை சேர்ந்த கூலித்தொழிலாளி, கலெக்டர் அலுவலகத்தில், மனைவி, மருமகள், பேரக்குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றார்.
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 52; கல் உடைக்கும் தொழிலாளி; இவரது மனைவி மகேஸ்வரி, 43, மகன்கள் சரத்குமார், சுரேஷ். சரத்குமாரின் மனைவி நந்தினி, 26; இவர்களது குழந்தைகள் ஹர்ஷினி, 7, பவீனா, 5, மற்றும் கணிழன், 3. முருகேசனின் தந்தை ஆறுமுகத்துக்கு பூர்வீக சொத்தாக, அஜ்ஜயனஹள்ளியில் ஒன்பது ஏக்கர் நிலம் உள்ளது. அதை, முருகேசனின் சகோதரர்கள் நான்கு பேர் பிரித்து கொண்டனர். முருகேனுக்கு உரிய பங்கை தரவில்லை. இதனால், முருகேசன் தனது சகோதரர்கள் மீது நடவடிக்கை கோரி மனு அளிக்க, தனது மனைவி மகேஸ்வரி, மருமகள் நந்தினி, பேரக்குழந்தைகளுடன் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் சென்றார். அப்போது, திடீரென பையில் வைத்திருந்த பாட்டில் மண்ணெண்ணெயை அவர்கள் தங்கள் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர். இதையடுத்து, முருகேசன் குடும்பத்தினரை போலீஸ் வேனில் ஏற்றி, தர்மபுரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X