சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ மீது டிராக்டர் மோதல்: மாணவர் உட்பட இருவர் பலி

Added : ஜன 14, 2020
Advertisement

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த கொண்டசாமனஹள்ளியை சேர்ந்தவர் முருகேசன், 52. ஆட்டோ உரிமையாளர். இவர், நேற்று மாலை, அனுமந்தபுரம் வழியாக, கொண்டசாமன ஹள்ளிக்கு ஆட்டோ ஓட்டிச்சென்றார். அப்போது, அனுமந்தபுரம் அரசு பள்ளி மாணவரான, கொண்டசாமனஹள்ளியை சேர்ந்த விக்கி, 15, சிவவிக்னேஷ், 12, அவருடைய தம்பி சிவசக்தி, 11 ஆகியோர், முருகேசனின் ஆட்டோவில் ஏறினர். அனுமந்தபுரம், பாலக்கோடு சாலை சந்திப்பில், எதிரே வந்த டிராக்டர், ஆட்டோ மீது மோதியது. இதில், முருகேசன் மற்றும் விக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த சிவவிக்னேஷ், சிவசக்தியை அப்பகுதியினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும், பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X