சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்து தகராறில் மகனை அடித்து கொன்ற தந்தை

Added : ஜன 14, 2020
Advertisement

பொம்மிடி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த மங்களகொட்டாயை சேர்ந்தவர் சின்னபையன், 60. இவரது மகன் வெங்கடேசன், 31. இவர், கடந்த, 2018ல், நடந்த கொலை வழக்கில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த, 25 நாட்களுக்கு முன், ஜாமினில் வந்தார். தினமும் குடித்து விட்டு, தந்தை சின்னபையனிடம், பணம் மற்றும் சொத்தை பிரித்து தர தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, சொத்து கேட்டு தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கீழே தள்ளியுள்ளார். ஆத்திரமடைந்த சின்னபையன் உருட்டுக் கட்டையால், வெங்கடேசனின் தலையில் அடித்ததில் அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னபையனை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X