பொது செய்தி

தமிழ்நாடு

பூவன் வாழைத்தாருக்கு கிராக்கி

Added : ஜன 14, 2020
Advertisement

ஈரோடு: பொங்கல் பண்டிகையால், பூவன் வாழைத்தாருக்கு, ஈரோடு மார்க்கெட்டில் கிராக்கி ஏற்பட்டது. ஈரோடு, நேதாஜி மார்க்கெட்டில், வாழைத்தார் விற்பனை சந்தை உள்ளது. ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, பூவன், ரஸ்தாளி, செவ்வாழை உள்ளிட்ட வாழைத்தார்களை, விவசாயிகள் கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையில், சுவாமிக்கு படையல் போட, பூவன் பழம் மட்டுமே பயன்படுத்துவதால், பூவன் வாழைத்தார், பழத்துக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: பொங்கல் என்பதால், கொடுமுடி பகுதி பூவன் வாழைத்தாருக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆனால், விலை ஏற்றமில்லை. இதனால் பூவன் வாழை மட்டும் தார் கணக்கிலும், மற்றவை பழக் கணக்கிலும் விற்பனை செய்யப்பட்டது. 100 முதல், 120 பழம் கொண்ட பூவன் வாழைத்தார், 250 ரூபாய்க்கு விற்றது. செவ்வாழை ஒரு பழம் (சிறியது) ஐந்து ரூபாய், பெரியது ஒன்பது ரூபாய், ரஸ்தாளி பழம் மூன்று ரூபாய்க்கு விற்றது. மாநகரை சுற்றியுள்ள, கோவில் கடை, மளிகை, பெட்டிக்கடை வியாபாரிகள், இரண்டு நாட்களில் பழுக்கும் வகையிலான தார்களை அதிகம் வாங்கிச் சென்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X